விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கவனத்தை ஈர்க்கும் ‘கொலை’ திரைப்படம் – சுவாரஸ்யத்தை தூண்டும் Sneak peek இதோ..

விஜய் ஆண்டனியின் கொலை பட சிறப்பு காட்சி வெளியானது - Vijay antony Ritika singh kolai sneak peek out now | Galatta

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும்.  தயாரிப்பாளராகவும், பட தொகுப்பாளராகவும் என பன்முக திறமையுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன், ரத்தம், அக்னி சிறகுகள், வள்ளி மயில்  போன்ற பல படங்களில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இதனிடையே விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட ‘விடியும் முன்’ பட  இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதைகளத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கொலை’. தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து அந்த கதையை மக்களிடம் நேர்த்தியான நடிப்பின் மூலம் கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படைப்பான கொலை படத்தின் மீது அறிவிப்பிலிருந்தே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடித்திருக்க இவர்களுடன் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் சங்கீத் போரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய  செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். முன்னதாக இவரது இசையில் இப்படத்தின் பாடல்களான ‘பார்த்த நியாபகம் இல்லையோ’, ‘யார் நீ’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்திடாத புதுமையான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் கொலை திரைப்படம் வரும் ஜூலை 21ம் தேதி தமிழில் ‘கொலை’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஹத்யா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தில் இடம் பெற்றுள்ள மிக முக்கியமான காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜான் விஜய் காவல் அதிகாரியாக மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கொலை குறித்து ரித்திகா சிங்கிடம் விசாரிக்க அங்கு அதிரடியாய் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. விறுவிறுப்பாக மர்மமான முறையில் கொல்லப்பட்ட நடிகையின் மரணம் குறித்து துவங்குகிறது திரைக்கதை..

தற்போது கொலை படக்குழு வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..'  மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!
சினிமா

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..' மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!

படங்களில் நடித்து முடித்த கையோடு ஆன்மீக பயணத்தில் நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

படங்களில் நடித்து முடித்த கையோடு ஆன்மீக பயணத்தில் நடிகை சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

ஆஸ்கார் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ புகழ் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டிய குடியரசு தலைவர்.. – விவரம் உள்ளே..
சினிமா

ஆஸ்கார் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ புகழ் தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டிய குடியரசு தலைவர்.. – விவரம் உள்ளே..