“அவருக்கும் எனக்கும் போட்டி என்பதே கிடையாது..” விஜய் சேதுபதி குறித்து மாவீரன் பட விழாவில் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல் – வீடி

மாவீரன் பட விழாவில் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan about Vijay sethupathi at maaveeran thanks meet | Galatta

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூலை 14 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’ இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் பேண்டசி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்த மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் ஆர்பரிப்பான கொண்டாட்டத்துடன் வெளியாகி இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.  மேலும் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் எட்டும் நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மாவீரன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நன்றி தெரிவிக்கும் விழா ஏறபாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் மாவீரன் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா மற்றும் இயக்குனர் மடோன் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படம் குறித்தும் அதில் பணியாற்றியவர்கள் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இதில் படத்தில் சிறப்பு கதாபாத்திரமான அசரீரி குரலில் நடித்த விஜய் சேதுபதி குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில்,   

"முதல் முதலா இந்த படத்திற்கு குரல் யார் என்று மடோனிடம் கேட்கும் போது அவர் சொன்னது, விஜய் சேதுபதி தான். நான் உடனே ஒகே னு சொன்னேன். இரண்டு நாள் கழிச்சு நான் அவரிடம் கேட்டேன். "இன்னிக்கு அவரோட குரலும் நானும் ஒண்ணா நடிச்சிட்டா நாளைக்கு நானும் அவரும் ஒண்ணா நடிக்க முடியாம போய்ட போதுது.. அதுதான் எனக்கு முக்கியம்' னு சொன்னேன்.. எனக்கு பொதுவாகவே விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு.. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும். இது ஒரு ஆரம்பம் என்றே நான் நினைக்கிறேன்.

படத்திற்கு அவரிடம் கேட்டவுடனே அவர் சொன்னது " இன்னிக்கு சிவா பெரிய ஹீரோ நினைச்சிருந்தா வேண்டாம் னு சொல்லலாம். ஆனா அவர் நான் பன்றேன் னு சொன்னதும் ஓகே சொல்லியிருக்கார். அப்போ நான் பண்ணனும் அதுதான் சரியானது. அது தான் ஆரோக்கியமா இருக்கும்' என்று அருண் கிட்ட பேசியிருக்கார்.

அவருக்கும் எனக்கும் போட்டி ன்ற விஷயமே இங்க கிடையாது நான் அவரை அவ்ளோ ரசிக்குறேன். அவரோட நடிப்பை ரசிச்சு பார்க்குறேன். இதெல்லாம் வார்த்தையா சொல்லிட்டு இருந்தேன். அதை நிரூபீக்க இங்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது.  அதை இரண்டு பேரும் சேர்ந்தே செய்து விட்டேன்." என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும் சிவகார்த்திகேயன் மாவீரன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

தளபதி விஜயின் ‘லியோ’ படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணி.. இணையத்தை கலக்கும் அப்டேட் இதோ..
சினிமா

தளபதி விஜயின் ‘லியோ’ படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணி.. இணையத்தை கலக்கும் அப்டேட் இதோ..

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..
சினிமா

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்..  - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..
சினிமா

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்.. - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..