தளபதி விஜயின் ‘லியோ’ படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணி.. இணையத்தை கலக்கும் அப்டேட் இதோ..

லியோ படத்திற்கு பின் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ் ரத்னகுமார் கூட்டணி வைரல் பதிவு உள்ளே - Lokesh kangaraj Rathna kumar join for new film | Galatta

நாடு முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘லியோ’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு தளபதி விஜயுடன் இரண்டாவது முறை கூட்டணி அமைத்து உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. கடந்த ஆண்டு பட பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. பக்கா ஆக்ஷன் அதிரடி கதைகளத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். மேலும் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யாப், மன்சூர் அலிகான் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இவரது இசையில் வெளியான நா ரெடி பாடல் ரசிகர்களிடையே மிகபெரிய வரவேற்பை பெற்று டிரெண்ட்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் லியோ திரைப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜையையொட்டி இப்படம் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பிரபல இயக்குனரும் லியோ பட வசனகர்த்தாவுமான ரத்னா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் “புது ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அப்பதிவினை மிகப்பெரிய அளவு வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த பதிவை வைத்து ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் உடைய அடுத்த படம் குறித்த வேலைகளான விக்ரம் 2, கைதி 2 என்று கேள்விகளையும் அப்பதிவில் கேட்டு வருகின்றனர்.

 

 

View this post on Instagram

A post shared by Rathna Kumar (@mr.rathna)

இது ஒரு புறம் இருக்க முன்னதாக ஆடை, குலு குலு ஆகிய படங்களை இயக்கிய ரத்னா அவர்களின் அடுத்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை லோகேஷ் கனகராஜ் எழுதவுள்ளதாகவும் அப்படத்தின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தனர். அதன்படி அந்த படத்தின் வேலையாக இருக்க கூடும் என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மற்றும் ரசிகர்கள் புது பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

இயக்குனர் ரத்னா கடந்த 2017 ல் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். முதல் படத்திலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தொடர்ந்து ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கினார். மேலும் அதே நேரத்தில் லோகேஷ் கனகராஜின் பிளாக் பஸ்டர் படங்களான மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்களுக்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..
சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..
சினிமா

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50 படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்.. - அட்டகாசமான அப்டேட்டுகளுடன் வெளியான வீடியோ வைரல்..