“எல்லா சண்டையும் 15 நாள் எடுத்துச்சு..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து நடிகர் அருவி மதன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட Exclusive interview இதோ..

சிவகார்த்திகேயனின் மாவீரன் குறித்து நடிகர் அருவி மதன் பகிர்ந்து கொண்ட  தகவல் - Aruvin madhan about Sivakarthikeyan maaveeran movie | Galatta

தமிழ் சினிமாவில் இந்த வாரம் புதுவரவாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாவீரன்'. மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான இப்படத்தை இயக்கியுள்ளார் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஷ்வின். அட்டகாசமான பேண்டசி கதைகளத்தில் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு, மோனிஷா, அருவி மதன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரித்த இப்படத்திற்கு ஒளிபதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான மூன்று பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் ஆதரவை பெற்று டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூலை 14 திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான மாவீரன் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக மூன்றாவது நாளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிரம்பி வழிய மாவீரன் திரைப்படம் பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவீரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருவி மதன் அவர்கள் மாவீரன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் படத்தில் இடம் பெற்ற முக்கியமான போட் காட்சி குறித்து கேட்கையில் அவர்,

"கடலுக்கு நடுவுல அந்த சீன் எடுக்கனும் னு ஒரு 4,5 மாசமா திட்டம் போட்டாங்க.  அது சில காரணத்தால் பண்ண முடியாம போச்சு.. அதுக்கப்பறம் பாண்டிச்சேரியில தான் அதை எடுத்தோம். வெளிய போட் மாதிரி செட் போட்டு அந்த சண்டை காட்சி எடுத்து மறுபடியும் கடலுக்கு நடுவுல 3,4 நாள் அதை எடுத்தோம்.  படத்தில் கிட்டத்தட்ட எல்லா சண்டையும் 15 நாள் எடுத்துச்சு.. அது மிகப்பெரிய விஷயம்" என்றார் அருவி மதன்.

அதை தொடர்ந்து மாவீரன் படத்தில் இடம்பெற்ற மக்கள் மாளிகை என்ற குடியிருப்பு பகுதி குறித்த கேட்கையில்"நீங்கள் படத்தில் பார்த்த வீடு செட் போட்டது. கிட்டத்தட்ட 2 அடுக்கு செஞ்சாங்க..   வெளியிலருந்து வர காட்சிகள் எண்ணூர் உண்மையான குடியிருப்பு பகுதியில் எடுத்தார்கள். அதுலையும் நிறைய இடத்துக்கு பெயிண்ட் பண்ணி, பர்மிஷன் வாங்கி கஷ்டபட்டு பண்ணாங்க.." என்றார் நடிகர் அருவி மதன்.

மேலும் பிரபல நடிகர் அருவி மதன் அவர்கள் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவராஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்..  - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..
சினிமா

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்.. - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..
சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..
சினிமா

“கொளுத்தி போடு டப்பாச..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்..! – அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை குவிக்கும் படக்குழு..