வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் பணிகள் துவக்கம் !
By Sakthi Priyan | Galatta | November 09, 2020 13:18 PM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இன்று மீண்டும் துவங்கியுள்ளது.
புதுச்சேரியில் நடக்கும் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். முன்பெல்லாம் சிம்புவின் படங்கள் பற்றி இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட் கொடுத்தால் தான் தெரிய வரும். ஆனால் தற்போது அப்படி இல்லை.
சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவரே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் சிம்புவை சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டதை புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சிம்பு.
கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர்.
முன்னதாக அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். ஈஸ்வரன் படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டேன் என்று நேற்று தான் ட்வீட் செய்தார். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டுள்ளார். சிம்பு, இப்படி தீயாக வேலை செய்வதை பார்த்து வியக்காதவர்களே இல்லை. இதே போன்று இருங்கள் சிம்பு என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
101 கிலோவாக இருந்த சிம்பு 30 கிலோ குறைத்து ஒல்லியாகிவிட்டார். உடம்பை குறைத்த கையோடு ஈஸ்வரன் படத்தில் பரபரப்பாக நடித்து முடித்தார். அதை முடித்த வேகத்தில் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார்.
Name : #AbdulKhaaliq
— Silambarasan TR (@SilambarasanTR_) November 9, 2020
Place : #Pondicherry
Mission : #Maanaadu #Atman #SilambarasanTR #STR @vp_offl #AvpPolitics @sureshkamatchi @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah pic.twitter.com/S6fexrOH6u
Maanaadu third schedule resumes in Pondicherry, Simbu's new image goes viral
09/11/2020 02:04 PM
Contestants get emotional writing Diwali wishes letters | New Bigg Boss 4 promo
09/11/2020 12:15 PM
Megastar Chiranjeevi tests positive for COVID-19
09/11/2020 11:29 AM