தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலித்து வருபவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் காஜல் அகர்வால்.

கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த கோமாளி படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2,சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இதனை தவிர ஹாட்ஸ்டாருக்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இவரது கல்யாணம் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.அவ்வப்போது புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் காஜல் அகர்வால்.சமீபத்தில் 15.7 மில்லியன் ரசிகர்களை பெற்று தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார் காஜல் அகர்வால்.

இவரது திருமண புகைப்படங்களும்,வீடியோக்களும் செம வைரலாக சமூகவலைத்தளங்களில் இருந்து வந்தன.தற்போது காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@kitchlug 😘 @conrad_maldives @twaincommunications @aasthasharma ❤️

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on