தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் விரைவில் பார்ட் 2 தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன்.TR இணைந்து நடித்துவரும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள கண்டாரா திரைப்படத்தை ரசித்த நடிகர் சிலம்பரசன்.TR படக்குழுவினரை வெகுவாக வாழ்த்தியுள்ளார்.  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா வீர விளையாட்டை மையப்படுத்தி கண்டாரா திரைப்படம் தயாராகியுள்ளது.

கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கண்டாரா திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார் ரிஷப் செட்டி. இன்னிலையில் சூப்பர் ஹிட் ஆகியுள்ள கண்டாரா திரைப்படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் சிலம்பரசன்.TR கேக் அனுப்பியுள்ளார். படக்குழுவினர் அந்த கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நடிகர் சிலம்பரசன்.TRக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படம் இதோ…
 

Thanks a lot ⁦@SilambarasanTR_⁩ !
STR for a reason❤️#Kantara@hombalefilms⁩ ⁦@shetty_rishabpic.twitter.com/7KDfjoibbn

— Karthik Gowda (@Karthik1423) October 5, 2022