தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சியான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடித்துள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியானது.அடுத்து பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி சக்கைபோடு போட்டு வருகிறது.கோப்ரா படத்தினை டிமான்டி காலனி,ஜமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே எஸ் ரவிக்குமார்,ரோஷன் மேத்யூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஆதீரா,தும்பி துள்ளல்,உயிர் உருகுதே பாடல்களின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்