தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணிகளில் ஒன்றான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சிலம்பரசன்.TR இசையமைப்பாளர் இசைப்புயல் AR.ரஹ்மான் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது படமாக தயாரான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சமீபத்தில் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கதையில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.K.கணேஷ் தயாரிப்பில், உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 2வது பாகமும் விரைவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினர் அப்போது தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் சிலம்பரசன்.TRக்கு விலைஉயர்ந்த காரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு பைக்கும் பரிசளித்தார்.

இன்று அக்டோபர் 7ஆம் தேதி தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் வகையில் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் சிலம்பரசன்.TR தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மலர்கொத்தும்  கேக்கும் அனுப்பியுள்ளார். சிலம்பரசன்.TR அனுப்பிய மலர்கொத்து மற்றும் கேக்கின் புகைப்படங்கள் இதோ…
 

Atman @SilambarasanTR_ wished his Blockbuster #VTK Producer @IshariKGanesh Sir a Happy Birthday and thanked him for all the positivity and wished for future collaborations.

As #SilambarasanTR is shooting for #PathuThala in Bellary, he sent a Cake and a Bouquet. @teamaimpr pic.twitter.com/jDcdpKsged

— Team AIM (@teamaimpr) October 7, 2022