தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பரத் தற்போது முன்னறிவான் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தனது திரைப்பயணத்தில் 50வது திரைப்படமாக பரத் நடிக்கும் திரைப்படம் லவ். இயக்குனர் RP.பாலா இயக்கத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் த்ரில்லர் திரைப்படமாக லவ் திரைப்படம் தயாராகி வருகிறது.

மேலும் பரத் நடிப்பில் யாக்கை திரி மற்றும் 8 ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதனிடையே மீண்டும் நடிகர் பரத் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மிரள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவியா அறிவுமணி ஆகியோர் மிரள் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மரகதநாணயம் & ராட்சசன் உள்ளிட்ட குறிப்பிடப்படும் படங்களை தயாரித்த AXESS FILM FACTORY நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு அவர்கள் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிடும் மிரள் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் M.சக்திவேல் இயக்கியுள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன்.R படத்தொகுப்பு செய்துள்ளார்.

மிரட்டலான த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் மிரள் திரைப்படத்திற்கு பிரசாத்.SN இசையமைத்துள்ளார். இந்நிலையில் பரத் - வாணி போஜனின் மிரள் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள த்ரில்லான அந்த மிரள் பட டீசர் இதோ…