தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் குறிப்பிடப்படும் சிறந்த நடிகையாகவும் தொடர்ந்து தரமான திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த ஆண்டு (2022) அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்தவகையில் முன்னதாக சீயான் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த துருவநட்சத்திரம் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு விரைவில் வெளியாகும் என சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ், வத்திக்குச்சி படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் தீயவர் கொலைகள் நடுங்க மற்றும் SG.சார்லஸ் இயக்கத்தில் சொப்பன சுந்தரி என ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் வரிசையில் அடுத்ததாக தயாராகியுள்ள படம் ஃபர்ஹானா. 

ஒரு நாள் கூத்து , மான்ஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் மற்றும் ஜித்தன் ரமேஷ் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் முதல் பாடலாக ஓர் காதல் கனா எனும் பாடல் சற்று முன்பு வெளியாகி உள்ளது. ரம்மியமான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.