தமிழ் சினிமாவின் பிரபல இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா, 8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடித்த குருதி ஆட்டம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குருதி ஆட்டம் திரைப்படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் மூன்று, ருக்மணி வண்டி வருது  வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ட்ரிக்கர் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆக்ஷன் த்ரில்லர் படமாக விரைவில் வெளிவர தயாராகியிருக்கும் திரைப்படம் ட்ரிக்கர். ட்ரிக்கர் படத்தில் அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள ட்ரிக்கர் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள ட்ரிக்கர் திரைப்படத்தை SP சினிமாஸ் வெளியிடுகிறது. ட்ரிக்கர் திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அதர்வாவின் ட்ரிக்கர் படத்தின் டீசர் தற்போது வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த டீசர் இதோ…