தமிழ் சினிமாவின் பிரபல படம் கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் வெற்றி இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த வனம் மற்றும் ஜோதி ஆகிய படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

தொடரந்து நடிகர் வெற்றி நடிப்பில் மெமரிஸ், கண்ணகி, ரெட் சாண்டல் மற்றும் பம்பர் என வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜீவி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜீவி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது.

ஜீவி படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் VJ.கோபிநாத் அவர்ளே ஜீவி 2 படத்தையும் இயக்கியுள்ளார். ஜீவி 2 திரைப்படத்தில் வெற்றியுடன் இணைந்து அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்க, கருணாகரன், ரோகினி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீவி 2 படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி நேரடியாக Aha தமிழ் தளத்தில் வெளியாகவுள்ள ஜீவி 2 படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜீவி 2 திரைப்படத்திலிருந்து டயர்ட் ஆச்சு டா பாடல் தற்போது வெளியானது. பிரேம்ஜி அமரன் பாடியுள்ள ஜாலியான அந்த டயர்ட் ஆச்சு டா பாடல் இதோ…