தென்னிந்திய திரை உலகில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக ஹீரோ வில்லன் என எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கும் நடிகர் சரத்குமார் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கதாநாயகனாக ஆழி & தி ஸ்மைல் மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சரத்குமார், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ருத்ரன், மழை பிடிக்காத மனிதன், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இதனிடையே சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பரம்பொருள். இயக்குனர் C.அரவிந்தராஜ் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடித்துள்ள பரம்பொரீள் திரைப்படத்தை கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரித்துள்ளனர்.

S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்யும் பரம்பொருள் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் பரம்பொருள் திரைப்படத்தின் முதல் பாடலாக சிப்பர ரிப்பர எனும் பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த சிப்பர ரிப்பர பாடல் இதோ…