அனல் பறக்கும் ஆக்ஷன்...லாரன்ஸின் அதிரடியான ருத்ரன் பட கிளிம்ப்ஸ் வீடியோ !
By Aravind Selvam | Galatta | October 29, 2022 19:36 PM IST
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இவர் அடுத்ததாக ருத்ரன்,சந்திரமுகி 2,அதிகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.ருத்ரன் படத்தினை பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார்,நாசர்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.K.P.திருமாறன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்.
இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னட மொழிகளில் 2023 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதிரடியான இந்த கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.