தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் மாநாடு. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவரும் மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.

மாநாடு திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக இயக்குனர் S.J.சூர்யா நடிக்க, இயக்குனர் இமயம் பாரதிராஜா,மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் S.A.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள மாநாடு படத்திற்கு பிரவீன்.K.L. படத்தொகுப்பு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த மாநாடு படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநாடு திரைப்படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தின் டப்பிங் சமயத்தில் நடிகர் சிலம்பரசன் S.J.சூர்யா போல் மிமிக்ரி செய்யும் புதிய வீடியோ தற்போது வெளியானது. மாநாடு ட்ரெய்லரில் இடம்பெற்ற S.J.சூர்யாவின் ட்ரெண்டிங் வசனமான “வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு… திருப்பியும் வருவான்” என்ற வசனத்தை நடிகர்  சிலம்பரசன் S.J.சூர்யா போல் மிமிக்ரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.