தமிழக சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) மிக பிரம்மாண்டமாக 18 போட்டியாளர்களோடு தொடங்கியது.

திங்கட்கிழமை (அகடோபர் 4)முதல் வாரத்திற்கான பிக்பாஸ் வீட்டின் கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். கலகலப்பாக நகரும் பிக்பாஸ் வீட்டில் நேற்று(அகடோபர் 5) கடந்து வந்த பாதை சுற்று நடைபெற்றது. பாடகிகள் இசைவாணி மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோரின் கடந்து வந்த பாதை ஹவுஸ் மேட்ஸ்களை கண்கலங்க வைத்தது.

தொடர்ந்து  இன்றைய (அக்டோபர் 6) நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின. முதல் ப்ரோமோவில் இமான் அண்ணாச்சி தனது கடந்து வந்த பாதை பற்றி பேச ஹவுஸ் மேட்ஸ்களுக்குள் மாற்றுக்கருத்துகளும், காரசாரமான விவாதமும் வெடிக்க, ஆரம்பமானது பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் முதல் சலசலப்பு.

இந்நிலையில் தற்போது 3-வது புரோமோ வெளியானது.இதில் ராஜு ஜெயமோகன், சின்னப்பொண்ணுவிடம் பெட்ரூமில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிரியங்கா டைனிங் டேபிளில் அமர்ந்த படி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் ராஜுவும் சின்னப் பொண்ணும் என்ன பேசுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக டப்பிங் செய்து காட்டும்  ப்ரோமோ வெளியானது. கலகலப்பான அந்தப் புரோமோ இதோ...