தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகர்களில் ஒருவராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல், இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் விக்ரம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் மற்றும் பாலிவுட்டில் அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் என்னும் மௌனப்படம் ஆகியவை விரைவில் வெளிவர உள்ளன.

இந்நிலையில் வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது விஜய்சேதுபதியின் முகிழ். முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் அவரது மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் முகிழ் படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு மணி நேர(62 min) திரைப்படமான முகிழ் படத்தை இயக்குனர் S.கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி புரோடக்சன்ஸ் மற்றும் பாக்கெட் மனி பிலிம்ஸ் புரோடக்சன் இணைந்து வழங்கும் முகிழ் படத்திற்கு சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ரெவா இசையில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் பாடல்களை எழுத, தற்போது முகிழ் படத்தின் புதிய பாடலாக “ஓயாத அலை போலே” பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது. அழகான அந்த பாடலை கீழே உள்ள லிங்கை கண்டு மகிழுங்கள்.