முதல் 4 திருமணத்தை மறைத்து 5 வதாக திருமணம் செய்து கொள்ள ஆயத்தமான போலீஸ்காரர் மீது, அவரது 4 வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அப்பள ராஜு என்பவர், தலைமை காலவரமாக பணிபுரிந்து வருகிறார்.

போலீசாக இருக்கும் அப்பள ராஜு, கிட்டதட்ட 4 பெண்களை திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்தார். 

இதில் என்ன ஆச்சரியமான விசயம் என்றால், அந்த 4 மனைவிகள் ஒருவருக்கொருவர் தெரியாமலும், யாருக்கும் சந்தேகம் வராத வகையிலும், போலீசான அப்பள ராஜு, மிகவும் சாமத்தியமாக குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த சூழலில் தான், கடைசியாக அதாவது 4 வதாக திருமணம் செய்த மனைவியான பத்மா, கர்ப்பமாகி உள்ளார். இதனால், மகிழ்ச்சியடையாத போலீசான அப்பள ராஜு, தனது மனைவியை கட்டாயப்படுத்தி அந்த கருவை கலைத்து உள்ளார்.

அதே போல், அந்த 4 வது மனைவிக்கு தொடர்ச்சியாக 4 முறை கர்ப்பத்தை கலைத்ததால், அவரது மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் வந்துள்ளது. 

இப்படியாக கணவன் மீது சந்தேகம் அடைந்த 4 வது மனைவி பத்மா, தனது கணவனைப் பற்றி வெளியே சற்று விசாரிக்கத் தொடங்கி உள்ளார்.

அப்போது தான், போலீஸ் அப்பள ராஜுவுக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் ஆகி, அந்த 3  மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 5 பிள்ளைகள் இருப்பது தெரிய வந்தது. 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த 4 வது மனைவி பத்மா, இதை எல்லாவற்றையும் தன்னிடமிருந்து மறைத்து தன்னை திருமணம் செய்தது, தன்னை இத்தனை நாட்களாக ஏமாற்றி வந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், மிகவும் நொந்து போனார்.

இந்த அதிர்ச்சிகள் அடங்குவதற்குள், கணவன் அப்பள ராஜு அவருடன் பணி புரியும் சக காவலர் ஒருவரை 5 வதாக திருமணம் செய்ய ஆயத்தமாகி வருவதாகவும், 4 வது மனைவி பத்மாவிற்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனைக் கேட்டு இன்னும் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மனைவி, பொங்கி எழுந்து உள்ளார்.

இதனால், ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற 4 வது மனைவி பத்மா, தனது போலீஸ் கணவன் மீது அங்குள்ள திஷா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரில், “பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி உள்ளதால், அப்பள ராஜூவை காவலர் பணியில் இருந்து நீக்கி, அவரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், 4 வது மனைவி வலியுறுத்தி உள்ளார்.

இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.