குழந்தை நட்சத்திரமாக இருந்து தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிலம்பரசன்.அவர் பார்க்காத வெற்றியும் இல்லை அவர் பார்க்காத தோல்வியும் இல்லை.அதோடு இயக்குனர்,நடிகர்,பாடகர் என பன்முகங்களை கொண்ட சில தமிழ் நட்சத்திரங்களில் ஒருவர் சிலம்பரசன்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிம்பு.

பின்னர் நாயகனாக அறிமுகமாகி பல டாப் ஹீரோக்களுக்கு டஃப் தரும் வகையில் இவரது எனர்ஜி இருந்தது.வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக அவதரித்தார் சிம்பு.இவர் படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க நட்சத்திர நாயகனாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று உருவெடுத்தார் சிம்பு.கோலிவுட்டின் ட்ரெண்ட்செட்டர்களில் ஒருவராக இருக்கிறார் சிம்பு.

எவ்வளவு புகழ் வந்ததோ அதே அளவு சர்ச்சைகளை சந்தித்த ஒரே நடிகர் சிம்பு மட்டும்தான்.இடையில் சில காரணங்களால் ஒரு படத்தின் ஷூடிட்ங்கிற்கு சரியாக வரவில்லை என்ற குற்றச்சாட்டு ஆரம்பித்து Redcard பல குற்றச்சாட்டுகளை சிம்பு மீது சுமத்தி வந்தனர்.சிம்புவும் அதற்கு ஏற்றார் போல உடலெடை கூடியது என்று இருக்க அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

அவ்வளவு தான் சிம்பு என்று பலரும் பேசி வந்த வேளையில் விமர்சனங்களை உடைத்தெறிந்து ரசிகர்கள் காட்டிய அன்பிற்காக மீண்டு புது அவதாரத்தில் வந்தார் சிம்பு.சில காரணங்களால் இடையில் சில சலசலப்புகளை சந்திக்க நேர்ந்தது என்றும் இனி அப்படி ஒருபோதும் இருக்காது என்றும் சிம்பு வாக்குறுதி அளித்தார்.அதேபோல ஈஸ்வரன்,மாநாடு என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்தினார்.மாநாடு படம் பெரிய வெற்றியை பெற்று சிம்புவின் அடுத்த இன்னிங்க்ஸுக்கு அடிக்கல் நாட்டியுள்ளது.

இவர் நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு,பத்து தல,கொரோனா குமார் என அடுத்தடுத்து படங்கள் ரெடியாகி வருகின்றன.இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு பல ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.