வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணியின் முக்கிய வீரர்கள் உட்பட மொத்தம் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், வரும் 6 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது.

வரும் 6 ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த போட்டிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என்று வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளன.

அதன் படி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுமே விளையாட உள்ளன.

அத்துடன், “கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று, முன்னதாக குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தான், இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனி ஆகியோர் ஆமதாபாத் வந்தடைந்தனர்.

இப்படியாக, ஆமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இந்திய அணி வீரர்கள் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் பவுலர் சைனி என மொத்தம் 4 இளம் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதியாகி உள்ளது.

மேலும், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 4 வீரர்கள் மற்றும் 3 கிரிக்கெட் அணியின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் இந்திய அணி தரப்பில் 7 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி உள்ளது. 

அதாவது, இன்னும் சில தினங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி தற்போது அகமதாபாத்திற்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் தான், கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் வரையில், அவர்கள் தனிமையில் இருப்பார்கள்” என்றும், பிசிசிஐ தெரிவித்து உள்ளது. 

அதன் பிறகு 2 முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு கிடைத்த பிறகே, தற்போது பாதிக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் வீரர்கள்  மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்றும், கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, 4 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஒரு நாள் போட்டிகளில் புதுமுக வீரர்களாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ள ஷாரூக்கான், சாய் கிஷோர், ரிஷி தவான் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இந்த முறை விளையாட வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.