கரெக்ட்டா 10 வருஷத்துக்கு முன்னாடி டிவியில கலக்கிட்டு இருந்த ஒரு பையன் ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸ் ஆச்சு,அந்த படம் தான் மெரினா,அந்த பையன் பேரு சிவகார்த்திகேயன்.இதுக்கு முன்னாடி இப்படி தான் சில பேர் டிவியில இருந்து வந்தாங்க ஒண்ணு ரெண்டு படத்துல காணமால் போய்டுவாங்கன்னு பலரும் பேசுனாங்க.ஆனா அந்த படம் நல்ல ஓடி எல்லாரையும் ஆச்சரியப்படுத்துச்சு.அந்த படத்துல கொஞ்ச நேரம் தானப்பா வந்தான் அப்டின்னு அடுத்த பேச்சு வர ஆரம்பிச்சது.

அப்போ இவர் நடிச்ச மனம் கொத்தி பறவை,கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்கள் வெளிய வந்து ஹிட் அடிச்சது,ஏதோ காமெடி வெச்சு படம் ஓடிடுச்சுனு சொல்ல , என்னால முழு படத்தையும் ஹீரோவா கொண்டுபோக முடியும்னு அவர் காட்டிய படம் தான் எதிர்நீச்சல்.இப்படி கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவா வளர்ந்து வந்த அவரை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.இந்த படம் மூலமா ஏற்கனவே தனக்கு கிடைச்சிருந்த குழந்தைகள்,தாய்மார்கள் சப்போர்ட்டை இன்னும் ஸ்டராங் ஆக்கிக்கிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்த படத்தோட வெற்றி இவர் காணாம போயிருவாருன்னு சொன்ன எல்லாரையும் இவரோட அடுத்த படம் என்னனு கவனிச்சு பார்க்க வெச்சது.அடுத்ததா மான் கராத்தே,காக்கி சட்டைன்னு ஒரு ஹீரோவுக்கான ஆக்ஷன் எல்லாத்தையும் படிப்படியா வளர்த்துக்கிட்டு வந்த சிவகார்த்திகேயனுக்கு.2016 மற்றுமொரு ப்ளாக்பஸ்டர் வருஷமா அமைஞ்சது.ரஜினிமுருகன்,ரெமோ அப்டின்னு ரெண்டு செம ஹிட் படங்கள்,இவரை அடுத்த ஜெனரேஷன் முக்கிய நடிகர்கள்ல ஒருத்தரா நிலைநாட்டுச்சு.

தொட்டதெல்லாம் ஹிட்ன்னு போயிட்டு இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரே மாதிரி படமா நடிக்கிறாருன்னு ஒரு விமர்சனமும் வந்தது.அவங்களுக்கு பதில் சொல்ற மாதிரி வேலைக்காரன்,ஹீரோ போன்ற படங்கள்ல நடிச்சாரு சிவகார்த்திகேயன்.இருந்தாலும் தன்னோட கர்மஷியல் பார்முலா குறையாமையும் சில படங்களை தொடர்ந்து பண்ணிட்டு இருந்தாரு.இடையில் சீமராஜா,Mr லோக்கல் போல படங்கள் ஓடாமல் போக சிவகார்த்திகேயன் அவ்ளோ தான், டிவிக்கே போயிரலாம் என்று பலரும் பேசி வந்தனர்.

நம்ம வீட்டு பிள்ளை,கனா போன்ற படங்கள் மூலம் தனக்கான ரசிகர்களை தான் சம்பாதித்து கொண்டதை நிரூபித்தார் சிவகார்த்திகேயன்.ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர்,தயாரிப்பாளர்,பாடகர் என பல பரிமாணங்களை கையில் எடுத்து அதில் ஜெயித்தும் காட்டினார்.அடுத்தடுத்து தன்னோட ஒவ்வொரு அடியையும் பார்த்து கவனமாக எடுத்து வைத்து தனது கடின உழைப்பால் சிவகார்த்திகேயன் இந்த இடத்துக்கு வந்துருக்காரு.அவரோட வெற்றி சினிமாவுல ஜெயிக்கணும்னு வர்ற ஒவ்வொரு சாமானியனோட வெற்றியா ரசிகர்கள் கொண்டாடிட்டு இருக்காங்க.

மக்களை தன்னால் முடிந்த வரை மகிழ்ச்சியா வச்சுருக்கணும்னு ஒவ்வொரு படத்துக்கும் அவர் போடும் உழைப்பு ரொம்ப பெருசு.கடைசியா வெளியான இவரோட டாக்டர் படம் ரஜினி,விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களை போல வசூலில் சாதனை படைத்தது இவர் தான் தமிழ் சினிமாவின் அடுத்த வசூல் சக்கரவர்த்தி என்ற அந்தஸ்தை வாங்கி கொடுத்துச்சு.

ஏற்கனவே உலகமெங்கும் ரசிகர்களை முக்கியமாக ஃபேமிலி பேஸ்,குழந்தை ரசிகர்கள் கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்ததா தமிழ்-தெலுங்கு Bilingual,கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம்,ஏலியன் சப்ஜெக்ட் அயலான்,காலேஜ் ஸ்டுடென்ட் டான் என அடுத்த இன்னிங்ஸிற்கு ரெடி ஆகி வருகிறார்.

10 வருஷங்கள் திரைவாழ்க்கையில் கடக்கும் சிவகார்த்திகேயனுக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு,அவர் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து இந்தியா சினிமாவின் சிறந்த என்டேர்டைனர்களில் ஒருவராக வரவும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்