தமிழ் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தவகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள வேட்டுவம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர்  K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பீரியட் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் மிக அழுத்தமான அரசியல் கொண்ட அழகிய காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து வழங்கும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் மற்றும் “டான்சிங் ரோஸ்” ஷபீர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 

கிஷோர் குமாரின் ஒளிப்பதிவில், டென்மா இசையமைத்துள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் அந்த கதாபாத்திரங்கள் நட்சத்திரம் நகர்வது என்ன மாதிரியான திரைப்படம் என பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த வீடியோ இதோ…