தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும், இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், திகழும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக தயாரான ராதேஷ்யாம் திரைப்படம் கடந்த மார்ச் 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து தெலுங்கு & ஹிந்தி என இரு மொழிகளில் தீபிகா படுகோன் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே படத்திலும் நடித்து வரும் பிரபாஸ் முன்னதாக நேரடி பாலிவுட் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். இதிகாசக் கதைகளைமான இராமாயணத்தைத் தழுவி தயாராகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக இந்திய அளவில் பிரமாண்ட வெற்றி பெற்ற கேஜிஎஃப் 1&2 படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் சலார் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். HOMBALE FILMS தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சலார் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க பிரித்திவிராஜ் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசை அமைக்கும் சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சலார் படப்பிடிப்பில் இருப்பதாக புகைப்படத்தை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஸ்ருதி ஹாசனின் புகைப்படம் இதோ…
shruti haasan shared update of salaar movie shooting prabhas prashanth neel