விஜய் தொலைக்காட்சியின் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல விதமான வேடங்களில் நடித்து தனது நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்தவர் புகழ். இதனை அடுத்து மக்களின் ஃபேவரட்டான  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேற லெவல் காமெடியில் அசத்திய புகழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் புகழ் சிக்சர் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சபாபதி மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித் குமாரின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் சிறிய நகைச்சுவை வேடத்தில் நடித்தாலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

தொடர்ந்து அருண்விஜயின் யானை, சந்தானத்தின் ஏஜன்ட் கண்ணாயிரம், மிர்ச்சி சிவா & யோகிபாபு இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதியபடம் ஆகிய படங்களில் நடித்துள்ள குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக களமிறங்கும் திரைப்படம் மிஸ்டர்.ஜுகீப்பர்.

J4 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வன விலங்கு பூங்காவின் காவலராக புகழ் நடிக்கும் அட்வென்சர் நகைச்சுவை திரைப்படமாக தயாராகும் மிஸ்டர்.ஜுகீப்பர் திரைப்படத்தை இயக்குனர் J.சுரேஷ் எழுதி இயக்குகிறார். சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு மிஸ்டர்.ஜுகீப்பர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. 

இந்நிலையில் மிஸ்டர்.ஜுகீப்பர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக புகழ் பிலிப்பைன்ஸ் செல்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை புகழ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். மேலும் இயக்குநர் J.சுரேஷ் விமான நிலையத்தில் புகழுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படம் இதோ…