இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடரந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

அந்தவகையில் தெலுங்கில் நந்தமூரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் NBK107, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் MEGA154 ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகையாக மட்டுமல்லாமல் இசையின் மீது இருக்கும் காதலால் தொடர்ந்து பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன் எழுதி பாடி நடித்துள்ள மியூசிக் வீடியோ She is a HERO. பெண்மையை போற்றும் பாடலாக She is a HERO மியூசிக் வீடியோ தயாராகியுள்ளது.

ஸ்ருதிஹாசன் மற்றும் MC அல்தாஃப் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மியூசிக் வீடியோவை மோஹிட் முகி இயக்க, அதீத் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கரண் கஞ்சன் மற்றும் கரண் பரித் இணைந்து தயாரித்துள்ள She is a HERO பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள She is a HERO மியூசிக் வீடியோ இதோ…