தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வருகிற டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் வரிசையில் 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - சிலம்பரசன்TR வெற்றிக் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய நடித்துள்ளனர். 

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையை கேஆர்ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Happy to be associated with @KRG_Studios for @SilambarasanTR_ @menongautham’s #VendhuThanindhathuKaadu Karnataka release 👍@arrahman @IshariKGanesh @RedGiantMovies_ @Udhaystalin #VTKFromSep15 https://t.co/HkFIBwD0FK

— Vels Film International (@VelsFilmIntl) September 8, 2022