மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்து கடந்த 2019 வெளிவந்த லூசிஃபர் திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இதனையடுத்து லூசிஃபர் திரைப்படத்தின் 2வது பாகமாக L2: எம்புரான் திரைப்படம் தயாராகவுள்ளது.

L2: எம்புரான் திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் சமிபத்தில் அறிவித்தனர். இதனிடையே லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார். 

நீரவ்ஷா ஒளிப்பதிவில் S.தமன் இசையமைக்கும் காட்ஃபாதர் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். வருகிற அக்டோபர் 5-ம் தேதி காட்ஃபாதர் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்தில் சத்யப்ரியா ஜெயதேவ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…

Introducing Lady Superstar #Nayanthara as 'Sathyapriya Jaidev' from the world of #GodFather ❤️‍🔥

First Single update soon🔥

GRAND RELEASE ON OCT 5

Megastar @KChiruTweets @BeingSalmanKhan @jayam_mohanraja @ActorSatyaDev @MusicThaman @LakshmiBhupal @AlwaysRamCharan @ProducerNVP pic.twitter.com/XEcTktasSj

— Konidela Pro Company (@KonidelaPro) September 8, 2022