பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் இன்று செப்டம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படமான பிரம்மாஸ்த்ரா படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ரன்பீர் கபூர், ஆலியா பட் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா, மௌனி ராய், சௌரவ் குஜ்ஜார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் ஷாரூக்கான் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ரிலீசாகியுள்ள பிரம்மாஸ்த்ரா படத்தை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

பங்கஜ் குமார் ஒளிப்பதிவில் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவகுமார் பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் நடிகை ஆலியா பட்டிற்கு டப்பிங் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ் திரை உலகில் பாடகியாக பாடல்களைப் பாடி வரும் பிருந்தா சிவகுமார் தற்போது பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் மூலம் முதல் முறை டப்பிங் கலைஞராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

View this post on Instagram

A post shared by Brindha Sivakumar (@brindhashiv)