சென்சார் முடித்து பிரம்மாண்ட ரிலீஸுக்கு ரெடி..! சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' குறித்த அட்டகாசமான அறிவிப்பினை வெளியிட்ட படக்குழு..

சிவகார்த்திகேயனின் மாவீரன் சென்சார் குறித்து தகவலை பகிந்த படக்குழு Sivakarthikeyan Maveeran Censor runtime details out now | Galatta

தமிழ் சினிமாவில் ரசிகர்களினால் கொண்டாடப்படும் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் முன்பு வெளியான டாக்டர், டான் ஆகிய படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றியையடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஸ்டாராகவும் தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் முன்னதாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியடைந்ததையடுத்து திரைப்படத்தின் கதைகளை ஈடுபாடுடன் கவனமாக தேர்ந்தெடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதன்படி தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்தும் ஒப்பந்தாமாகியும் வருகிறார். தனி ரசிகர் பட்டாளத்துடன் திரையுலகின் பிரின்ஸாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘SK21’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் Sci-Fi திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. அதையடுத்து முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சிவ்கார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. மண்டேலா படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் பேண்டசி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சுனில், சரிதா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும்  பரத் ஷங்கர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று டிரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.  

மாவீரன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. பக்கா ஆக்ஷன் காட்சிகளுடன் பேண்டசி கலந்த இப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சிவகர்த்திகேயனின் மாவீரன் படத்தின் சென்சார் குறித்த தகவலை படக்குழு அட்டகாசமான வீடியோ புரோமொவுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி 2 மணி நேரம் 26 நிமிடங்கள் ஓடும் 'மாவீரன்' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. முன்னதாக சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வரும் ஜூலை 14 ம் தேதி வெளியாகவிருக்கும் மாவீரன் திரைப்படம் அதே நாளில் தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு ‘மகாவீரடு என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனமும் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

🌟 @Siva_Kartikeyan’s #Maaveeran Certified U/A!
Releasing Worldwide on July 14th🔥
Directed by @madonneashwin 🎬#MaaveeranFormJuly14th #VeerameJeyam @RedGiantMovies_ @iamarunviswa @AditiShankarofl @DirectorMysskin @iYogiBabu @bharathsankar12 @vidhu_ayyanna @philoeditpic.twitter.com/toYRv9Rd7v

— Shanthi Talkies (@ShanthiTalkies) July 6, 2023

 

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!
சினிமா

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!

மாமன்னன் பட வெற்றி... வடிவேலுவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை! வீடியோ உள்ளே
சினிமா

மாமன்னன் பட வெற்றி... வடிவேலுவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை! வீடியோ உள்ளே

லைகா ப்ரொடக்ஷன்ஸ் - 2018 பட இயக்குனர் இணையும் புதிய அதிரடி படம்... விஜய் சேதுபதி இணைகிறாரா? விவரம் உள்ளே
சினிமா

லைகா ப்ரொடக்ஷன்ஸ் - 2018 பட இயக்குனர் இணையும் புதிய அதிரடி படம்... விஜய் சேதுபதி இணைகிறாரா? விவரம் உள்ளே