"இனி படத்தில் நடிக்க வேண்டாம்னு இருக்கேன்" அடுத்த திட்டம் குறித்து கௌதம் மேனன் பகிர்ந்த தகவல் - Exclusive Interview இதோ..

நடிகராக தனது திரைப்பயணம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட தகவல் - Director Gautham menon about his acting career | Galatta

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதை பல ஆண்டுகளாக தக்க வைத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். ‘மின்னலே’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். மேலும் தமிழ்., இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு சிலம்பரசன் TR கூட்டணியில் அட்டகாசமான கேன்ஸ்டர் கதைகளத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து அப்படத்தினை வெற்றி படமாக மாற்றியுள்ளனர். மேலும் சமீப காலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனரான கௌதம் மேனன் தற்போது நடிகராகவும் தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார்.

அதன்படி பல ஹிட் திரைப்படங்களிலும் முன்னணி இயக்குனர்களின் படங்களும் பல படங்களில் நடித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டிரான்ஸ், பத்து தல, விடுதலை முதல் பாகம் ஆகிய படங்கள் இவரது ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது.  தற்போது கௌதம் மேனன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் மிக  முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் விடுதலை இரண்டாம் பாகத்திலும் இயக்குனர் கௌதம் மேனன் நடித்து வருகிறார் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியான் விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான இறுதி கட்ட வேலையிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைபயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனராக இருந்து தற்போது நடிகராக கவனம் பெற்று வரும் பயணம் குறித்து பேசுகையில்,

"நான் ஆரம்பத்தில் சில படங்கள் வந்தது. ட்ரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் லாம் ரொம்ப நாளா பேசிட்டுதான் பண்ணேன். அதுக்கப்பறம் எனக்கு ஒரு தேவை இருந்தது.  துருவ நட்சத்திரம் படம் முடிக்க அது உதவும் னு நினைச்சேன்.

நிறைய பெரிய பெரிய இயக்குனரிடம் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தது.  ஒரு 7 லருந்து 8 படங்கள் அந்த தேவைக்காக எடுத்து பண்ணேன்.  இப்போ நான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சிருக்கேன். நடிக்கறது எனக்கு வசதியான இடமாக இருக்காது. என்னால முடியாது அது.  இப்போ படங்கள் பண்றது வேண்டாம் னு இருக்கேன். நடிக்குறதுக்காக நான் வரல.. அதுல முதல்லருந்தே விருப்பம் இல்லை.." என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.

மேலும் தொடர்ந்து இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட அட்டகாசமான பல தகவல் கொண்ட வீடியோவை காண...

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!
சினிமா

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!

தந்தை மீது புகார்.. அடுக்கடுக்கான குற்றசாட்டுகளுடன் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!
சினிமா

தந்தை மீது புகார்.. அடுக்கடுக்கான குற்றசாட்டுகளுடன் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!

மூன்றே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சினிமா

மூன்றே ஆண்டில் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!