தளபதி விஜயின் லியோ படத்தோடு கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... வேற லெவல் ரிலீஸ் அப்டேட் இதோ!

லியோ பட கேரள ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய கோகுலம் மூவீஸ்,vijay in leo movie kerala release rights bagged by gokulam movies | Galatta

நாளுக்கு நாள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜய் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இதனிடையே தனது அடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கும் லியோ திரைப்படத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியான தளபதி விஜய் - திரிஷா ஜோடி நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. பின்னர் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தின் தலைகோணம் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் திரைப்பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகும் லியோ திரைப்படத்தை வெளிநாடுகளில் இதுவரை எந்த தென்னிந்திய படமும் ரிலீஸ் ஆகாத அளவிற்கு பிரம்மாண்டமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் தளபதி விஜயின் மீது அதிக அன்பு கொண்ட ரசிகர்கள் குவிந்திருக்கும் கேரளாவில் லியோ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் - 2018 பட இயக்குனர் இணையும் புதிய அதிரடி படம்... விஜய் சேதுபதி இணைகிறாரா? விவரம் உள்ளே
சினிமா

லைகா ப்ரொடக்ஷன்ஸ் - 2018 பட இயக்குனர் இணையும் புதிய அதிரடி படம்... விஜய் சேதுபதி இணைகிறாரா? விவரம் உள்ளே

சினிமா

"எந்த போதை பழக்கமும் இல்லை ஆனால் இந்த போதைப் பழக்கம் இருக்கிறது!"- மாரி செல்வராஜின் சுவாரஸ்யமான ஸ்பெஷல் பேட்டி இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு... பக்கா மாஸாக வந்த  ப்ரோமோ வீடியோ இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு... பக்கா மாஸாக வந்த  ப்ரோமோ வீடியோ இதோ!