கோலாகலமாக நடைபெற்ற மறைந்த இயக்குனர் கே.வி ஆனந்த் வீட்டு திருமணம்.. – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..

கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் கேவி ஆனந்த் மகள் திருமணம் - Director KV anand daughter sadana marriage | Galatta

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராகவும் இருந்தவர் மறைந்த கே வி ஆனந்த். கடந்த 1994 ம் ஆண்டு வெளிவந்த தேன்மாவின் கொம்பத்து படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி திரையுலகில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலே கே வி ஆனந்த் அவர்களுக்கு தேசிய விருது சிறந்த ஒளிப்பதிவிற்காக கிடைத்தது. அதன்பின் சில படங்கள் தெலுங்கிலும் மலையாலத்திலும் பணியாற்றிய கே வி ஆனந்த். 1996 ல் வெளிவந்த காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  அதன்பின் தொடர்ந்து தமிழில் மிக முக்கியமான படங்களுக்கு கே வி ஆனந்த் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன்படி நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி ஆகிய படங்களில் பணியாற்றினார்.

அதன்பின் 2005 ல் ஸ்ரீகாந்த், பிரித்வி ராஜ் நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கே வி ஆனந்த். அதை தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார். இதில் அயன், கோ போன்ற படங்கள் தமிழ் சினிமாவின் வசூல் நிலவரத்திற்கு திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட். மேலும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

biggboss fame pavani reddy admitted in hospital post goes viral

திரையுலகில் ஆக சிறந்த ஒளிப்பதிவாளராகவும் முன்னணி இயக்குனராகவும் வலம் வந்த கே வி ஆனந்த் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய இழப்பாக திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் பார்க்கப் பட்டது, இன்றும் அழுத்தமான கருத்துகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் கே வி ஆனந்த் அவர்கள் முன்னுதாரமாக விளங்குகிறார்.

இயக்குனர் கே வி ஆனந்த் அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னையில் கே வி ஆனந்தின் மகள் சாதனாவிற்கும் விஷ்ணு ராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற இவரது திருமண விழாவிற்கு இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் ஷங்கர் மற்றும் விஜய் சேதுபதி உட்பட பல திரைபிரபலங்கள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். இதையடுத்து இருவரது திருமண விழா புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்துகளுடன் வைரலாகி வருகிறது.

biggboss fame pavani reddy admitted in hospital post goes viral

 

“இதுதான் கதையில இருந்துச்சு.. ஆனா பண்ண முடியல..” விண்ணைத்தாண்டி வருவாயா படம் குறித்து  இயக்குனர் கௌதம் மேனன்.. - Exclusive interview இதோ..
சினிமா

“இதுதான் கதையில இருந்துச்சு.. ஆனா பண்ண முடியல..” விண்ணைத்தாண்டி வருவாயா படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன்.. - Exclusive interview இதோ..

பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.! - நடுவராக முன்னணி இசையமைப்பாளர்.. விவரம் உள்ளே..
சினிமா

பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.! - நடுவராக முன்னணி இசையமைப்பாளர்.. விவரம் உள்ளே..

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!
சினிமா

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!