“ஒரு கட்டத்தில் வலியால் அழ ஆரம்பித்தேன்..” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பாவனி.. ஆறுதல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள், ரசிகர்கள்..

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பிக்பாஸ் பாவனி விவரம் உள்ளே - Biggboss fame pavani reddy admitted in hospital | Galatta

ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரெட்டைவால் குருவி’, ‘சின்னதம்பி’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி.  சீரியல்களில் நடிக்கும்போதே ரசிகர்களின் விருப்ப நாயகியாக  வலம் வந்த பாவனி. உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார். போட்டியின் துவக்கத்திலிருந்தே கவனமாக விளையாடி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.பின் இந்த நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் போட்டியாளராக இடையே வந்த அமீர் பாவனியை பிக் பாஸ் நிகழ்ச்சியிலே காதலிப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக பாவணி காதல் திருமணம் செய்தவர் எதிர்பாராத அவரது மறைவினால் மன அழுத்தத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் அமீரின் காதலை ஏற்றுகொள்ளா விட்டாலும் அமீர் பாவணி ஜோடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவராக இருந்து வந்தனர்.  

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து பின்னர் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் ஒன்றாக நடன போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் அதை தொடர்ந்து இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வது. பல சிறப்பு பெட்டிகளில் கலந்து கொள்வதுமாய் தங்கள் காதலை உறுதிபடுத்தினர். மேலும் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பொங்கல் வெளியீடாக வெளிவந்த ‘துணிவு’ படத்தில் இருவருமே நடித்திருந்தனர்.

தற்போது அமீர் வெள்ளித்திரையில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாவனிக்கும் திரைப்படங்களில் வாய்புகள் குவிந்து வருகின்றது.  ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளான அமீர் பாவனி திருமண அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது நடிகை பாவனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகை பாவனி பதிவிட்ட பதிவில். "என் வாழ்க்கையில் இந்த 15 நாட்களைக் கழிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் என் கழுத்தில் சிறிய வலி ஏற்பட்டது. நாளுக்கு நாள் அது அதிகரிக்க துவங்கியது. நான் பல எலும்பியல் நிபுணரிடம் ஆலோசித்து, பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டேன். ஆனால் வலி குறையாமல் அதிகரித்து கொண்டே இருந்தது.   நான் பல இரவுகளை தூக்கமில்லாத ழித்துள்ளேன். ஒரு கட்டத்தில்  வலியால் அழ ஆரம்பித்தேன். இடையில் எனக்கு படப்பிடிப்புகள் கூட இருந்தன. ஓய்வு எடுக்க எனக்கு நேரம் இல்லை. அதனால் இந்த வலியுடன் வேலையை செய்ய முடிவு செய்தேன்..

பின்னர் ஹைதராபாத் சென்றேன். படப்பிடிப்பில் இருந்தவர்கள் என்னை மிகவும் பாதுகாப்பாக உணர வைத்து என்னை வீட்டில் இருப்பது போல் உணர வைத்தனர். அப்படித்தான் எனது படப்பிடிப்பை முடித்தேன். நான் தினமும் என் பிசியோதெரபியைத் தொடர்ந்தேன், ஆனால் வலி மோசமாகிவிட்டது, என்னால் என் வலது கையை தூக்க முடியவில்லை, அந்த கை உடைந்து போனது போல இருந்தது. அதிகாலையில் எழுந்து தயாராவதே எனக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது. வலியால் நான் சத்தமாக கத்துவேன்.  

இறுதியில் டாக்டர் சுகுமார் அவரது மருத்துவ குழுவின் உதவியாள எண்டோஸ்கோபிக் டிஸ்கேக்டமி என்ற அறுவை சிகிச்சையை தற்போது முடித்துள்ளேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். வலியிலிருந்து மீட்ட இவர்களுக்கு எனது பெரிய நன்றி..  இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறேன். இந்த சம்பவத்தில் நான் மட்டுமல்ல, எனது குடும்பத்தினரும், எனது நண்பர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த வலியில் என் கூடவே இருந்ததற்கு நன்றி அமீர். உங்கள் தூக்கத்தையும் உங்கள் வேலையையும் நான் கெடுத்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். எப்போதும் எனக்காக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். என்று குறிப்பிட்டு நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து நடிகை பாவனியின் பதிவிற்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாவனியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 

View this post on Instagram

A post shared by Pavni (@pavani9_reddy)

 

பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.! - நடுவராக முன்னணி இசையமைப்பாளர்.. விவரம் உள்ளே..
சினிமா

பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி.! - நடுவராக முன்னணி இசையமைப்பாளர்.. விவரம் உள்ளே..

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!
சினிமா

அனிருத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் ஓயாத சாதனை ஓட்டம்.. கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்.!

தந்தை மீது புகார்.. அடுக்கடுக்கான குற்றசாட்டுகளுடன் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!
சினிமா

தந்தை மீது புகார்.. அடுக்கடுக்கான குற்றசாட்டுகளுடன் பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!