50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ் D50 பட அறிவிப்பு,dhanush next directorial his d50 movie shoot started sun pictures | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் திடீரென செம்ம சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கிய நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்து ஏரியாக்களிலும் தனது சிறந்த நடிப்பால் சிக்சர் அடிப்பவர். அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்ததாக தற்போது 1930-களில் நடைபெறும் அதிரடி பீரியட் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வரும் ஜூலை 28 ஆம் நாள் நடிகர் தனுஷின் பிறந்த நாளில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் தனுஷ், தனது அடுத்த நேரடி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படமாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார். இதனிடையே தனது திரை பயணத்தின் 50-வது திரைப்படமாக தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் D50. கடந்த சில மாதங்களுக்கு முன்பு D50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தனது 50வது திரைப்படமான D50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் அவர்களே இயக்கி நடிக்க இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் தற்போது D50 திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான ஒரு அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. வானத்தை நோக்கி ரத்தம் தெறிக்கும் வகையிலும் பின்னணியில் சில தொழிற்சாலைகள் இயங்குவது போன்றும் முன்னால் கடற்கரையில் பாறைகளுக்கு மேல் தனுஷ் ஆக்ரோஷமாக நிற்பது போன்ற இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களை அதிர வைத்திருக்கிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் தனுஷ் திருப்பதியில் மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்து வந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த போஸ்டரிலும் தனுஷ் தலைமுடி இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். ஏற்கனவே இந்த திரைப்படம் அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் இதில் விஷ்ணு விஷால் , எஸ் ஜே சூர்யா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் நம்பத் தகுந்த எந்த அறிவிப்பும் இதுவரை வராததால் விரைவில் D50 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ இதர அறிவிப்புகளை படக்குழுவே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சற்றுமுன் சர்ப்ரைஸாக வந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வரும் தனுஷின் ஐம்பதாவது படமான D50 திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இதோ…
 

#D50 - A @dhanushkraja Directorial 🔥 Shoot Begins! pic.twitter.com/LTsbdcFEw4

— Sun Pictures (@sunpictures) July 5, 2023

சினிமா

"எந்த போதை பழக்கமும் இல்லை ஆனால் இந்த போதைப் பழக்கம் இருக்கிறது!"- மாரி செல்வராஜின் சுவாரஸ்யமான ஸ்பெஷல் பேட்டி இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு... பக்கா மாஸாக வந்த  ப்ரோமோ வீடியோ இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - Hவினோத் கூட்டணியின் KH233 அறிவிப்பு... பக்கா மாஸாக வந்த  ப்ரோமோ வீடியோ இதோ!

“வெந்து தணிந்தது காடு உருவாக்க நான் அவ்ளோ விஷயம் பேசிருக்கேன்..” கௌதம் மேனன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..
சினிமா

“வெந்து தணிந்தது காடு உருவாக்க நான் அவ்ளோ விஷயம் பேசிருக்கேன்..” கௌதம் மேனன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..