பிரபல சீரியல் நடிகையாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சமீரா ஷெரிப்.தெலுங்கு சீரியல்களில் நடித்து கவனம் பெற்ற இவர் தமிழில் விஜய் டிவியின் பகல் நிலவு தொடரின் மூலம் அறிமுகமானார்.இந்த தொடரின் முன்னணி வேடத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக மாறினார் சமீரா.

இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார் சமீரா.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டை பறக்குது மனசு தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் சமீரா.இந்த தொடர் சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது.

இந்த தொடரை சையத்-சமீராவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.இதனை தவிர சில சூப்பர்ஹிட் தொடர்களையும்  இந்த ஸ்டார் ஜோடி இணைந்து தயாரித்திருந்தனர்.கர்பமாக இருப்பதை கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களிடம் அறிவித்தார் சமீரா.

கர்பமாக இருப்பதுடன் பல போட்டோஷூட்கள்,டான்ஸ் வீடியோக்கள் என்று அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் சமீரா.தற்போது சமீரா சையத் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற நற்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளனர்.இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.