ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய தமிழக பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கே. டி. ராகவனுக்கு, டெல்லியில் இருந்து தற்போது கிடைத்துள்ள சிக்னலால், அவர் மீண்டும் அரசியல் களம் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், அவரது கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவது போன்றும், 
அப்படி கே.டி. ராகவன் பேசிக்கொண்டே சுய இன்பம் மேற்கொள்வது போன்றும்” ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. 

கே.டி. ராகவன் தொடர்பான இந்த ஆபாச வீடியோ விவகாரம், தமிழக பாஜகவில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 

கே.டி. ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளர் மதன், “கே.டி. ராகவன், மட்டுமல்லாமல் இன்னும் 15 தமிழக பாஜக நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட சுமார் 60 வீடியோக்கள் என்னிடம் இருப்பதாகவும்” மதன் அந்த வீடியோவில் பேசியிருந்தார். 

மதனின் இந்த வீடியோ தமிழக அரசியலில் மிகப் பெரிய பூகம்பத்தை உண்டு பண்ணியதால், இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாகவும் மாறிப்போனது, 

இந்த நிலையில் தான், “தமிழக பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டு என்று, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்திருந்தார்.

அத்துடன், தனது ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து, கே. டி. ராகவன், தாமாகவே முன் வந்து உடனடியாக தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு, கட்சி சார்ந்த எந்த நடவடிக்கைகளிலும் கே. டி. ராகவன், கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இதனால், அவர் கமலாலயத்திற்கும் வராமல் இருந்து வந்தார். 

இந்நிலையில் தான், கே. டி. ராகவன், மீண்டும் அரசியல் களத்தில் களமிறங்கி கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. 

அதற்குக் காரணம், டெல்லியில் இருந்து அவருக்கு கிடைத்த சில சிக்னல்களின் அடிப்படையில் தான், அவர் மீண்டும் கட்சிக்குள் களம் இறங்கியிருக்கிறார் என்றும், பாஜக வட்டாரத்திலேயே கிசுகிசுக்கப்படுகிறது.

அதாவது, பாஜக மேலிடத் தலைவர்கள் கே. டி. ராகவனுக்கு தேசிய செயலாளர் பதவி வழங்க இருந்த நேரத்தில் தான், அவர் சம்மந்தப்பட்ட ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால், அவரும் பெரும் சர்ச்சையில் சிக்கி, அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியையும் இழந்து தவித்தார்.

இதனையடுத்து, “தமிழக பாஜக பெரும் புள்ளிகள் சிலர் திட்டமிட்டு தனக்கு இந்த நிலைமையை ஏற்படுத்தி விட்டனர்” என்பதைத் தெரிந்துகொண்ட ராகவன், டெல்லி 
தலைமையில் தனக்கு ஆதரவானவர்கள் சிலரிடம் இத்தனை நாட்களாகத் தொடர்ந்து பேசி வந்தார் என்று, கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் தனக்கு ஏற்பட்ட நிலைமை அவர் விளக்கியிருக்கிறார் என்றும், இதனையடுத்து அவர் “சட்ட ரீதியாக ராகவனை சிக்க வைக்கும் படி அந்த வீடியோ இல்லை என்பதாலும், அது தொடர்பான புகார்கள் எதுவும் இல்லாததாலும்” கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் சிலர அவருக்கு கிரீன் சிக்னல்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இப்படியாக, டெல்லி தலைமையிடம் இருந்து அவருக்கு சிக்னல்களால் மீண்டும் கிடைத்து உள்ளதால், அவருக்கு மாநில பொதுச் செயலாளர் பதவியானது மீண்டும் வழங்கப்படலாம் என்றும், பாஜகவினரே குசுகுசுக்கத் தொடங்கி உள்ளனர்.

அதன் படியே, கே. டி. ராகவன் பழையபடி கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரம் காட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

அதாவது, கடந்த 9 ஆம் தேதியன்று செங்கல்பட்டு சிறைக்குச் சென்ற ராகவன், காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி கோரிக்கை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பாஜக, இந்து முன்னணி பொறுப்பாளர்களைச் சந்தித்து வந்தார். 

அதன் பிறகு, காஞ்சிபுரம் சென்று காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரையும் சந்தித்து அவர் ஆசி பெற்று வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, கே. டி. ராகவனுக்கு கட்சிகள் மீண்டும் ஆதரவான சூழல் நிலவுவதால், அவருக்குக் கட்சியில் விரைவில் மாநில பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கிடைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, அவருக்குக் கட்சியின் தேசிய செயலாளர் பதவியும் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.