சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வம்சம்.இந்த தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சசிந்தர் புஷ்பலிங்கம்.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.இதனை தொடர்ந்து தமிழ் கடவுள் முருகன் தொடரில் நடித்து அசத்தினார்.

இந்த தொடரில் சிவன் வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.அடுத்தாக ரோஜா,சந்திரகுமாரி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் சசிந்தர் புஷ்பலிங்கம்.இதனை அடுத்து விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1ல் நடித்தார்.

இந்த தொடரில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார் சசிந்தர்.இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது முடிந்தது.இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் நடித்து வருகிறார்.

தனது மனைவி கர்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் தெரிவித்தார் சசிந்தர்,தற்போது தனக்கு அழகிய மகன் பிறந்துள்ளான் என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் சசிந்தர்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.