தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர்  M.சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் M.சசிகுமார் நடித்த “காரி” திரைப்படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்ந்து இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” ஆகிய படங்கள் M.சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான கதாபாத்திரத்தில் M.சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் "நான் மிருகமாய் மாற".

முன்னதாக காமன் மேன் (COMMON MAN) என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் "நான் மிருகமாய் மாற" என மாற்றப்பட்டது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தில், M.சசிகுமார் உடன் இணைந்து ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிக்கிறார். 

ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்.NB படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். வருகிற நவம்பர் 18ஆம் தேதி நான் மிருகமாய் மாறா திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் மிரட்டலான புது ப்ரோமோ தற்போது வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்த அந்த ப்ரோமோ வீடியோ இதோ…