தமிழ் சினிமாவின் முன்னணி கதாராயகர்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய AK62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். முன்னதாக அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் H.வினோத் - அஜித்குமார் - போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபலமான நடிகை மஞ்சுவாரியர் அஜித் குமார் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் பாவணி, அமீர் மற்றும் மமதி சாரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரியில் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

துணிவு படத்தின் டீசர்  டிரைலர் மற்றும் பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "துணிவு படத்தின் முதல் பாடல் பக்கா மாஸ் பாட்டா இருக்கும்… முக்கியமா அஜித் சார் டான்ஸ்க்கு ஒரு ரசிகனா எப்படி பண்ணனுமோ அப்படி பண்ணி இருக்கோம்" என தெரிவித்துள்ளார்.