தமிழ் திரை உலகின் முக்கிய தயாரிப்பாளராகவும் குறிப்பிடப்படும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மறுபுறம் அரசியலிலும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறார். முன்னதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. 

உதயநிதியுடன் இணைந்து வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவர தயாராகியுள்ளது கலகத் தலைவன் திரைப்படம். 

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி உடன் இணைந்து நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள கலகத் தலைவன் படத்தில் கலையரசன் மற்றும் பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி தயாரித்து நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படத்திற்கு K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரலி இணைந்து இசையமைத்துள்ளனர். 

கலகத் தலைவன் திரைப்படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சில தினங்களுக்கு முன், திரை உலகில் உதயநிதி ஸ்டாலின் நடிகராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சந்திப்பு மற்றும் கலகத் தலைவன் படக்குழு இணைந்த அட்டகாசமான விழாவை நமது கலாட்டா குடும்பம் நடத்தியது. 

இதில் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வெளிவந்து சூப்பர் ஹிட்டான “தடம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது உதயநிதி ஸ்டாலின் தான்” என தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தடம் திரைப்படம் சார்பாக மகிழ் திருமணி அவர்களை சந்தித்ததில் இருந்து கலகத் தலைவன் திரைப்படம் தொடங்கியது பின்னர் கலகத் தலைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் என பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். வைரலாகும் இந்த நிகழ்வின் வீடியோ இதோ…