நாணயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். தொடர்ந்து ஸாம்பி திரைப்படமாக மிருதன், சயின்ஸ் பிக்சன் ஸ்பேஸ் திரைப்படமாக டிக் டிக் டிக் என இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.

கடைசியாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த ஃபேண்டசி திரைப்படமான டெடி திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டெடி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் ஆர்யா கூட்டணியில் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது கேப்டன் திரைப்படம்.

ஆர்யாவுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் கேப்டன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள கேப்டன் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற செப்டம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய கேப்டன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் திரைப்படத்தின் அடுத்த பாடலாக பாடலாசிரியர் கார்க்கி எழுத, முன்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் பாடகர் யாசின் நிசார் இணைந்து பாடியுள்ள கைலா எனும் ரொமான்டிக்கான பாடல் தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…