தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் சந்தானம், முன்னதாக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயா படத்தின் ரீமேக்காக ஏஜென்ட் கண்ணாயிரம் தயாராகியுள்ளது.

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போது பிரபல கன்னட இயக்குனர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உருவாகும் #SANTA15 திரைப்படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் குலுகுலு.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை & வசனங்களை எழுதிய எழுத்தாளரும், மேயாதமான் & ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனருமான இயக்குனர் ரத்ன குமார் குலு குலு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு படத்தில் அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குலு குலு படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் குலு குலு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கலகலப்பான என்டர்ட்டெய்னிங் திரைப்படமாக தயாராகியிருக்கும் குலு குலு திரைப்படம் ஜூலையில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குலு குலு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. கலக்கலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…