தென்னிந்திய திரை உலகின் சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக வத்திக்குச்சி திரைப்படத்தின் இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் தயாராகிவருகிறது. மேலும் மலையாளத்தில் நடிகை பார்வதியுடன் இணைந்து HER படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாக உள்ள சூழல் எனும் புதிய வெப் சீரியல் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள துருவ நட்சத்திரம், அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க மற்றும் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த மோகன்தாஸ் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

இந்த வரிசையில் முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின்  தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் படத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை RDC மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்திற்கு ஜெர்ரி சில்வஸ்டர் வின்சென்ட் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப் படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.