விரைவில் அம்மாவாகும் நமீதா… வைரலாகும் புகைப்படங்கள்!
By Anand S | Galatta | May 10, 2022 12:17 PM IST

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான நடிகை நமீதா, நடிகர் விஜயகாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
கதாநாயகியாக மட்டுமல்லாமல் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடிகை நமீதா சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். குறிப்பாக தமிழில் சரத்குமாரின் ஏய், சத்யராஜின் இங்கிலீஷ்காரன் & கோவை பிரதர்ஸ் தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன், அஜீத் குமாரின் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய நடிகை நமீதா கடந்த 2017ஆம் ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று (மே 9ஆம் தேதி) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்த நடிகை நமீதா இன்று (மே 10ஆம் தேதி) அவரது பிறந்த நாளன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் நமீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…