ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் மகத்தான கலைஞனாக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி & மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட்டடித்த இயக்குனரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

விக்ரம் திரைப்படத்தில், கமல் ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயன்ட் மூவிஸ் வெளியிட விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

முன்னதாக வருகிற மே 11-ஆம் தேதி விக்ரம் படத்தின் முதல் பாடலாக உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தல பத்தல” பாடல் ரிலீஸாகவுள்ளது . மேலும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் வருகிற மே 18-ம் தேதி கேனஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படவுள்ள நிலையில், வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வருகிற மே 15ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.