இலங்கையில் புரட்சி வெடித்து உள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் பொது மக்களால் அடித்து கொல்லப்பட்டிருக்கும் நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தற்போது பதவி விலகி உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அந்நாட்டு மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மிக கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை தற்போது தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 

இலங்கையில் தற்போது, அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போனதால், இறக்குமதி மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாகவே, இலங்கையில் அத்தியாவசியப் அடிப்படை பொருட்களுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் கிடுகிடுவென ஒரே அடியாக உயர்ந்து இருக்கிறது. இவற்றுடன், அந்நாட்டில் எரிப்பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக் கிடந்து, பல மடங்கு அளவுக்கு அதிக விலை கொடுத்து எரிப்பொருட்களை வாங்கிச் செல்லும் அவல நிலையும் உள்ளன.

இதன் காரணமாக, இலங்கையில் தற்போது மக்கள் புரட்சி ஏற்பட்டு, ஆளும் கட்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி, பிரதமர் பதவி விலக கோரி, கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த புரட்சி தீ, இன்றைய தினம் உச்சக்கட்டமாக பற்றி எரிந்த நிலையில், இலங்கையில் காணும் இடங்மெல்லாம், பொது மக்களின் போராட்டங்கள் யாவும் போர் களம் போல் காட்சி அளித்தன.

குறிப்பாக, ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இப்படி ஒரு மோசமான நிலைக்கு காரணம் என்று கூறி, அந்நாட்டின் எதிர்க் கட்சியினரும், பொது மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், “அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி” அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ச்சியான போராட்டங்கள் முன் எடுத்து வருகின்றனர்.

இப்படியாக, பல தரப்பில் இருந்தும் நெருக்கடி மிக கடுமையாக முற்றிய நிலையில், அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தப்பட்டது.

இந்த நிலையில் தான், போராட்டம் இன்னும் தீவிரமான நிலையில், கொழும்பு மற்றும் தெற்கு மாகாணங்களில் ஊரடங்கு ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

எனினும், ராணுவத்தின் அதிரடியான நடவடிக்கையும் தாண்டி, இலங்கையில் இன்றைய தினம் கலவரங்கள் வெடித்த நிலையில், வேறு வழியில்லாமல் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே, சற்று முன்னதாக பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

முக்கியமாக, மகிந்த ராஜபக்சே பதவி விலகளைத் தொடர்ந்து, இலங்கை அமைச்சரவை கலைக்கப்பட்டது. 

மேலும், ராஜபக்சே ஆதரவாளர்கள், இலங்கை அரசு எதிர்ப்பாளர்கள் இடையே வெடித்த மோதலால் கொழும்பில் பதற்றம் அதிகரித்த நிலையில், “சொந்த ஊரில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜபக்சே மீது போராட்டக்காரர்கள் குற்றசாட்டிய நிலையில், “கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து” எரித்தனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் தொற்றிக்கொண்ட நிலையில், பொது மக்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட முயன்ற இலங்கையின் ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி.  ஒருவர், பொது மக்களால் அடித்தே கொல்லப்பட்டு உள்ளார். இந்த செய்தியை, அந்நாட்டு போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர்.