1980களில் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் மோகன். உச்ச நட்சத்திரங்களாக ஜோதிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் இணையாக அந்த காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட நடிகர் மோகனின் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகள் அனைத்தும் திருவிழா கோலம் கொண்டது.

அதிலும் மோகன்-இசைஞானி இளையராஜா கூட்டணியில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் வெள்ளி விழா கொண்டாடியது. மோகன் திரைப்படங்களில் இசைஞானி இசையில் வெளிவந்த பாடல்களை இன்றும் பல கோடி ரசிகர்களின் மனதில் ரீங்காரமிடுகின்றன. முன்னதாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த மோகன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இயக்குனர் விஜய் ஸ்ரீ.G இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் திரைப்படத்தில் மோகன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு கதாநாயகியாக நடிக்க நடிகர்கள் யோகி பாபு மற்றும் சாருஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஹரா படத்தை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் தொடங்கப்பட்டு தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மோகனின் ஹரா படத்தின் GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. அந்த GLIMPSE வீடியோ இதோ…