தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் 36 வயதினிலே படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என அடுத்தடுத்த படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மம்மூட்டியுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் ஜோதிகா. முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கத்தில் தயாராகும் இத்திரைப்படத்திற்கு காதல் - தி கோர் என பெயரிடப்பட்டுள்ளது.

Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் சூர்யா இத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு திடீரென வருகை தந்து படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இதனையடுத்து காதல் - தி கோர் படப்பிடிப்பில் அனைவருக்கும் நடிகர் மம்மூட்டி ஸ்பெஷலாக பிரியாணி ட்ரீட் கொடுத்தார். இந்நிலையில் சூர்யா மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து பிரியாணியை பரிமாறிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…
 

Special occasions deserves special food.. 😊@Suriya_offl , #Jyotika and the entire crew were treated to a Sumptuous Biriyani by Mammookka yesterday at the location of @KaathalTheCore 😊#KaathalTheCore Shoot In Progress
#Mammootty #MammoottyKampany #JeoBaby #Suriya pic.twitter.com/GzggChTgpM

— MammoottyKampany (@MKampanyOffl) November 10, 2022

.@mammukka serving food to @Suriya_offl and #Jyothika @KaathalTheCore Location ♥️#KaathalTheCore #Mammootty #Suriya pic.twitter.com/Zc03AiQO0x

— Mammootty Fans Club (@MammoottyFC369) November 9, 2022