'ஆண்டனி தாஸ்' சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு தளபதி விஜயின் லியோ படக்குழுவின் செம்ம சர்ப்ரைஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

சஞ்சய் தத் பிறந்த நாளுக்கு விஜயின் லியோ படக்குழுவின் சர்ப்ரைஸ்,Sanjay dutt birthday special glimpse from leo movie | Galatta

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தளபதி விஜயின் லியோ பட குழுவினர் அட்டகாசமான புதிய GLIMPSE ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சஞ்சய் தத் இன்று ஜூலை 29ஆம் தேதி தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நமது கலாட்டா குழுமமும் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது. ஹிந்தியில் புகழ்மிக்க நடிகராக கொடி கட்டி பறக்கும் நடிகர் சஞ்சீதர் தற்போது தென்னிந்திய திரை உலகின் பக்கம் திரும்பி இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சஞ்சய் தத் தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த 2021-ல் மெகா ஹிட்டான மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். 

தளபதி விஜயின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 6 மாதங்களிலு 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. 50% தளபதி விஜய் படம் 50% லோகேஷ் படம் என்று இல்லாமல் லியோ படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இன்று ஜூலை 29ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சஞ்சய் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் அட்டகாசமான புதிய GLIMPSE ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதிரடியான அந்த GLIMPSE வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"யோகி பாபுவின் அடுத்த காமெடி சரவெடி ON THE WAY!"- கவனத்தை ஈர்த்த லக்கி மேன் பட கலகலப்பான டீசர் இதோ!

சினிமா

"D50 - ஆயிரத்தில் ஒருவன் 2 - 7G ரெயின்போ காலனி 2.. இதில் எது?"- ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய செல்வராகவனின் Shooting Spot புகைப்படம் இதோ!

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!
சினிமா

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!